ஏழைத் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமானோர் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர். பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, பலர் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு இன்னும் திரும்பவில்லை. இந்நிலையில் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஏழைத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
அதன்படி பிரதமர் ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் நீங்கள் 10 ஆயிரம் ரூபாயைப் பெற்று உங்கள் சொந்தத் தொழிலைத் தொடங்கலாம். இந்த திட்டம் தெருவோர வியாபாரிகள் அல்லது சில சிறு வணிகங்களைக் கொண்டவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நீங்கள் பயன் பெற விரும்பினால், உங்கள் மொபைலில் PM Svanidhi Mobile App ஐப் பதிவிறக்க வேண்டும். அல்லது Www.pmsvanidhi.mohua.gov.in என்ற இணையதளம் மூலமும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை 27,33,497 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 14 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும் 7 லட்சம் பேர் முழுமையான பயனடைந்துள்ளனர்.