வாலிபர் ஒருவர் பிச்சைக்காரன் போல வேடம் அணிந்து ஏமாற்றியதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சியால்கோட் பகுதியில் வாலிபர் ஒருவர் அழுக்கான முகத்துடன் கிழிந்த உடையுடன் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த காவல்துறையினருக்கு அந்த நபரின் மீது சந்தேகம் எழுந்துள்ளதால் அவரிடம் விசாரித்துள்ளனர். இதையடுத்து அவரிடம் அமெரிக்க டாலர்கள், பிரிட்டன் பவுண்டுகள் மற்றும் சவுதி ரியால்கள் இருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து அந்த நபரின் முகத்தை தண்ணீரால் கழுவி பார்த்த போது அவர் டிக்டாக் பிரபலமான யாசிர் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பிச்சைக்காரன் போல் வேஷம் போட்டு மக்களை ஏமாற்றி வந்த யாசிரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால் எதற்காக இவர் பிச்சைக்காரன் போல வேடமணிந்தார் என்ற விவரம் இன்னும் காவல்துறையினறுக்கு தெரியவில்லை. எனவே இதுகுறித்து காவல்துறையினர் யாசிரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.