நாகை மாவட்டம் அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் அடுத்துள்ள சீர்காழி அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை, நான்கு சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். அதனால் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமியின் இதுபற்றி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனை அறிந்த பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் அந்த நான்கு சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காயம் அடைந்த சிறுமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.