Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டுலயே… சப்பாத்தி மிருதுவாக வரணுமா? இந்த மாதிரி செய்யுங்க…!!!

சப்பாத்தி மிருதுவாக இருக்க என்ன செய்யலாம் என்ற சந்தேகம் அனைவருக்குமே இருக்கின்றது. பொதுவாக சிலருக்கு என்னதான் சப்பாத்தி மாவு பிசைந்தாலும், அவங்களுக்கு சப்பாத்தி சாப்டாவே வராது, இதன் காரணமாகவா, என்னமோ தெரியல பலர் வீட்டில் சப்பாத்தி என்றாலே பிடிக்காமல் போய் விடுகிறது. அவர்களுக்காக, வீட்டில் சப்பாத்தி பஞ்சு போல சாப்ட்டா வர என்ன செய்வது என்பதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

தேவையான பொருட்கள்:                               

கோதுமை மாவு     – 1 கப்                                                                                                                                                                                            உப்பு                            – தேவையான அளவு
நெய்                             – ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவை எடுத்து கொள்ளவும். பின்பு அதனுடன், உப்பு, நெய், தயிர் சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மாவை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு சப்பாத்தி கட்டையை வைத்து, மாவை நன்றாக தட்டி பிசைந்தால், மாவு நல்ல மிருதுவாக இருக்கும். பின் ஒரு ஈரப்பதமான துணியால், மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பின்பு நீளமாக உருட்டி, அதில் பாதியை மீண்டும் துணியால் சுற்றி விடவும். அடுத்ததாக, மாவினை ஒரே அளவாக சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி உருண்டை பிடித்து கொள்ள வேண்டும்.

ஒரு பலகையில் கோதுமை மாவை, உருட்டிய சப்பாத்தி மாவின் மேல் தூவி, மாவைத் தேய்த்து எடுக்கவும். பின் தேய்த்து வைத்த சப்பாத்தி மாவை, தோசைக்கல்லில் போட்டு 30 வினாடிகளில் நெய் விட்டு, வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு:

முதலில் கோதுமை மாவு நல்ல தரமானதாக இருக்க வேண்டும். பின் அதனுடன் தயிருக்கு பதிலாக, சூடான பால் அல்லது சூடான தண்ணீர் சேர்த்து மாவை பிசையலாம்.

சப்பாத்தி கடிப்பதினால் நல்ல மிருதுவாக வர, மாவை குறைந்த தீயில் திருப்பிப் போடக் கூடாது. அதேபோல்  வீட்டில் சப்பாத்தி மாவு அரைத்தால், ஒரு கிலோ கோதுமைக்கு, 100 கிராம் கொண்டைக்கடலையை சேர்த்து அரைத்து, மாவு பிசைந்தால்,சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

Categories

Tech |