காலிஃப்ளவர் மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
காலிஃப்ளவர் – 1
வெங்காயம் – 1
தக்காளி – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
மில்க் + க்ரீம் – 1/4 கப்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1/4 இன்ச்
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
பச்சை மிளகாய் – 1
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை துண்டுகளாக்கி பூக்களாக பிரித்து எடுத்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, அதில் பிரித்த காலிபிளவர், உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, ஓரளவு வேக வைத்து, நீரை வடித்து தனியாக வைத்து கொள்ளவும்.
பின்பு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதன்பின் இஞ்சி பூண்டை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாயை சேர்த்து தாளித்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய், அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பிறகு அதனுடன் மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி, சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
இறுதியில் பால் மற்றும் க்ரீமை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து, அதில் காலிஃப்ளவர் கிளறி, கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறினால், சுவையான காலிஃப்ளவர் மசாலா தயார்.