கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் 81 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 8 மாதங்களுக்குப் பின் கடந்த 17-ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. முதல் நாவலான 17-ஆம் தேதி பெங்களூரில் உள்ள பெரும்பான்மையான கல்லூரிகளில் 100 சதவீத மாணவர்கள் வருகை இருந்தது. பிற மாவட்டங்களில் சில கல்லூரிகள் தவிர பெரும்பான்மையான கல்லூரிகளில் 60 முதல் 80 சதவீத மாணவர்கள் கல்லூரிக்கு வந்துள்ளனர். கடந்த 4 நாட்களாக கல்லூரிக்கு வரும் மாணவ மாணவிகள் எண்ணிக்கை 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக உயர்கல்வித்துறை இயக்குனரக வட்டாரம் மூலம் தெரியவருகிறது.
கல்லூரிகள் திறக்கபட்டாலும் கோவிட் 19 விதிமுறைகள் 100% பின்பற்றப்பட்டு வருகின்றனர். அதே சமயத்தில் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த நான்கு நாட்களில் 30,000 மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பெங்களூருவில் 57, பல்லாரி மாவட்டத்தில் 7, ஹாசன் மாவட்டத்தில் 6 உட்பட 81 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.