தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் மிக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய 8 மாவட்டங்களில் பரவலாக மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மாலத்தீவு அருகே ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அரபிக்கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் 25-ஆம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.