கொரோனா வைரஸ் தொற்று பரவி உலகமே அல்லாடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது வைரஸ் பரவல் பல நாடுகளில் இரண்டாம் நிலையை எட்டியுள்ளது. சில நாடுகளில் குறைந்து வருகிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவிலும் தற்போதைய நிலையில் கொரோனா தொற்று குறைந்து கொண்டு இருக்கின்றது. இதனால் கொரோனா பரவலை மேலும் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக நாடு நாடு முழுவதும் இந்தியாவில் பள்ளி – கல்லூரி திறப்பு குறித்து பல மாநிலங்கள் முடிவெடுத்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின் வகுப்பறைக்குள் நுழைதல், வெளியேறுதல் அல்லது கற்றல் பொருட்கள் மற்றும் புத்தகங்களை தொடுவதற்கு பதிலாக மாற்று வழியை பயன்படுத்துதல் போன்ற முக்கிய தருணங்களில் தவறாமல் கை கழுவுதல் அல்லது சனிடைசர் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கிருமிகள் பரவலை எதிர்த்து போராடுவதற்கும், மாணவர்கள், பள்ளி ஊழியர்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் எளிதான வழிகளில் ஒன்று கை கழுவுதல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.