Categories
உலக செய்திகள்

அட்டை பெட்டியை தட்டிய குழந்தை…. காத்திருந்த இன்ப அதிர்ச்சி… தந்தையின் சர்பிரைஸ்…!!

குழந்தைக்கு பரிசு பொருளாக தோன்றிய தந்தை குழந்தையை தூக்கி கொஞ்சும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் மேல் பெற்றோர்களுக்கு கொள்ளை பிரியம் எப்போதுமே இருக்கும். பொதுவாக தந்தைக்கு ஆண் குழந்தையை விட பெண் குழந்தைதான் மிகவும் பிடிக்கும் என்பது உண்மைதான். இந்நிலையில் சமீப காலமாக குழந்தைகளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வெளிநாடுகளில் இருக்கும் தந்தைகள் திடீரென பரிசுப் பொருளாக குழந்தைகள் முன்பு வந்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர்.

அவ்வாறு இங்கு குழந்தை ஒன்று தனக்கு முன்பு இருந்த ஒரு பெரிய அட்டைப் பெட்டியை தட்டியுள்ளது. அப்போது திடீரென்று தன்னுடைய தந்தை அதனுள் இருந்து வெளியே வந்துள்ளார். இதனால் வெகுநாட்கள் கழித்து தன் தந்தையை பார்க்கும் குழந்தை மிகவும் சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளது. இதையடுத்து அந்த தந்தை குழந்தையை தூக்கி பாசத்தோடு கொஞ்சும் அழகு காண்போரின் கவலையை மறக்க செய்துள்ளது.

https://twitter.com/i/status/1330113462719172610

Categories

Tech |