கொரோனா வைரஸ் தொற்று பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போக்குவரத்து சேவையை முழுவதும் முடக்கப்பட்டது. தற்போது சூழலில் கொரோனா குறைந்து வரும் நிலையில், தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி முதல் சென்னை புறநகர் ரயில்களில் பெண்கள் பயணிக்க அனுமதி அளித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். அதன்படி வார நாட்களில் அதிகாலை முதல் 7 மணி வரையிலும், காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், அதன் பின் 7.30 மணி முதல் இரவு வரையிலும் பயணிக்கலாம். மேலும் 12 வயது வரை உள்ள குழந்தைகள் பெண் பயணிகளுடன் பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.