Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! முன்னேற்றம் உண்டாகும்…! பயணம் மேற்கொள்வீர்கள்….!!

மீனம் ராசி அன்பர்களே…! பிடிவாத குணத்தை தயவுசெய்து தளர்த்திக் கொள்ள வேண்டும்.

யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். கோபம் இல்லாத பேச்சை கண்டிப்பாக பேச வேண்டும். இடமாற்றம் போன்ற தகவல் வரக்கூடும். வீடு மாற்றலாமா என்ற சிந்தனை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்பு விரிவடையும் நாளாக இருக்கும். வீண் அலைச்சலை தயவுசெய்து தவிர்க்கப்பாருங்கள். மாலை நேரத்தில் மகிழ்ச்சி கூறிய தகவல் இல்லம் வந்து சேரும். புதிய வாய்ப்புகள் கிடைக்க கூடும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவியிடையே எதையும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சனை ஓரளவு சரியாகும்.திட்டமிட்டு எதையும் செய்ய வேண்டும் முன்னேற்றம் உண்டாகும்.

காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கையாள வேண்டும். மாணவக் கண்மணிகள் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எதையும் செய்யுங்கள். படித்த பாடங்களை எழுதிப் பாருங்கள்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சூரிய பகவான், ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 7 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |