தொற்று நோயின் தாக்கத்தினால் ஒரே மாதத்தில் 1859 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் தொகையில் முதலிடத்தை பெற்றுள்ள சீனாவில் தற்போது தொற்று நோயால் பலர் பலியாகி வருகின்றனர். தொற்று நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு சிறந்த முறையில் சிச்சை அளித்து வரும் நிலையில், மிக முக்கிய ஓயாக கருதப்படும் வாந்திபேதி, எலிக் காய்ச்சல் போன்றவற்றிற்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.
மேலும் ஹெபடைட்டிஸ் வைரஸ் தாக்கத்தினால் உருவாகும் காய்ச்சல், காசநோய், சிபிலிஸ், கொகோர்ரியா, எய்ட்ஸ், கால் மற்றும் வாய்ப்புண் போன்றவற்றுக்கு மட்டும் மார்ச் மாதத்தில் 8,79,800 பேருக்கு சிகிச்சை அளிக்க பட்டுள்ளது. அதில் சிகிச்சை பலனின்றி 1859 பேர் பலியாகியுள்ளனர் என்று சீனா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.