திருச்சியில் அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து திமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். இதனை கண்டித்து திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தில் பெரியார் சிலை முன்பு திமுக திருச்சி மத்திய மாவட்டம் சார்பில் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
மேலும் சாலையில் சென்று கொண்டிருந்த மற்ற பேருந்துகளையும் தாக்க முயன்றனர். இதனை தடுக்க முயன்ற போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 200-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்