வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கப் போவதாக நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகை அனுஷ்கா, அவர் நடித்த அருந்ததி, பாகுபலி, இஞ்சி இடுப்பலகி ஆகிய முக்கிய படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றது. இவர் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் நடிப்பில் தற்போது வெளியான சைலன்ஸ் படம் சரியான வரவேற்பை பெறாத காரணத்தால் பெண் மையக் கதாபாத்திரங்கள் கொண்ட மூன்று படங்கலை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இதுவரை அனுஷ்கா தனது அடுத்த படம் குறித்து எந்த வீத அறிவிப்பும் கொடுக்கவில்லை. அது மட்டுமின்றி வருடத்திற்கு ஒரு படம் தான் நடிப்பேன் என்றும் எனக்கு நெருக்கமான தயாரிப்பு நிறுவகங்களுடன் மட்டுமே பணிபுரிய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.