தாய் தன் மகனை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள மெல்போர்னியா பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அந்த கொலை சம்பவத்தை செய்தது அவருடைய 81 வயதான தாய் தான் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இது குறித்து உள்ளூர் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், இறந்த நபரின் 81 வயது தாயும் வீட்டினுள் பலத்த காயங்களுடன் காவல்துறையினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அப்போதே அந்த 50 வயதுடைய அவருடைய மகனும் இறந்து கிடந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தில் அவரது தாய் தான் தன் மகனை கோடரியால் வெட்டி கொலை செய்ததை ஒத்துக் கொண்டதால், அவர் உடனடியாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்களில் ஒருவர் கூறுகையில், “அவருடைய தாய் அந்த நபரின் மேல் மிகவும் அக்கறை கொண்டவராக இருப்பார். அவனை எப்போதும் அதிகமாக நேசித்ததால் அவள் தன் குடும்பத்தின் மேல் அர்ப்பணிப்புடன் இருந்தார். மேலும் அவர் மிகவும் அமைதியானவர்” என்று தெரிவித்துள்ளார்