அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், பாஜக – அதிமுக கூட்டணி ஒன்றும் புதிதாக வரப் போறதில்லை. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து மிகப்பெரிய வரலாற்று தோல்வியை அதிமுக கூட்டணி அந்த தேர்தலை சந்தித்தது.
புதுசா இவர்கள் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் என்ன சாதிக்கப் போறாங்க ? இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டினுடைய எந்த கோரிக்கையையும் அவர்கள் நிறைவேற்ற வில்லை. நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு தரேன்னு சொல்லிட்டு, கடைசி நேரத்தில் தமிழ்நாட்டுக்கு விதி விலக்கு தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதே மாதிரி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தினார்கள் தவிர கட்டுமான பணிகளை தொடங்கவில்லை. அடிக்கல் நாட்டியத்தை அடுத்து தொடங்கி இருந்தால் இப்போது கட்டி முடித்திருக்கலாம்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு தடை விதித்து பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்து இருக்காங்க. காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பின்படி ஆணையம் அமைக்க கடைசிவரைக்கும் இழுத்து அடித்தார்கள். சுப்ரீம் கோர்ட்டு சொன்ன பிறகு ஆணையத்தை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.தமிழ் நாட்டுக்கு கொடுக்கவேண்டிய காலர்சிப் கொடுக்க வில்லை. இந்த நிலையில் அதிமுக – பிஜேபி கூட்டணி ஏற்கனவே அடைந்த தோல்வியை விட மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் தவிர வெற்றி பெறுவதற்கான கூட்டணி அது ஒன்னும் கிடையாது என தெரிவித்தார்.