இறந்த தாயின் உடலை புதைப்பதா? எறிப்பதா? என்று இரு மகன்கள் சண்டையிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் வசித்து வந்த பெண் புலாய் தபாடே(65). இவர் சில வருடங்களுக்கு முன் தன் இளைய மகன் மற்றும் தனது கணவன் ஆகியோருடன் கிறிஸ்துவத் மதத்திற்கு மாறியுள்ளார். ஆனால் இவருடைய மூத்த மகன் சுபாஷ் கிறிஸ்துவ மதத்திற்கு மாறமல் இந்து மதத்தைப் பின்பற்றி வந்துள்ளார். இந்நிலையில் புலாய் சில நாட்களுக்கு முன்பு வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருடைய உடலை இந்து முறைப்படி எரிப்பதா? அல்லது கிறிஸ்துவ முறைப்படி புதைப்பதா? என்று இரண்டு மகன்களுக்கு இடையே கடும் பிரச்சினை எழுந்துள்ளது.
இதனால் இருவரையும் ஊர்மக்கள் சமாதானம் செய்ய முயன்றும் இருவரும் கேட்கவில்லை. இந்நிலையில் இருவரும் தன் முடிவில் பின்வாங்காமல் இருந்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து அப்பகுதி காவல்நிலையத்திற்கு தெரியவந்ததை அடுத்து காவல்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முடிவு செய்து உடலை கிறிஸ்தவ முறைப்படி புதைப்பது என்று முடிவு செய்து சடலத்தை புதைத்துள்ளனர்.
ஆனால் இந்த முடிவில் திருப்தி இல்லாத அவருடைய மூத்த மகன் சுபாஷ் தன்னுடைய தாயாரின் உடலை ஒரு பொம்மை போல செய்துள்ளார். பின்னர் அதை நெருப்பு வைத்து எரித்து தகனம் செய்துள்ளார். நெருப்பு வைத்து தகனம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.