கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க மக்கள் இரண்டு முக கவசங்களை அணிவது நல்லது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தாலும் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “நாட்டில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழை, குளிர்காலம் மற்றும் விழாக்கள் என தமிழக மக்கள் 3 சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள். அதனால் கொரோணா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே மக்கள் அனைவரும் இரண்டு முக கவசங்களை ஒரே நேரத்தில் அணிந்து கொள்வது நல்லது. அதன் மூலம் நோய்த் தொற்றில் இருந்து எளிதாக மக்களை பாதுகாத்து கொள்ளலாம்” என்று அவர் கூறியுள்ளார்.