Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… 3 நாட்கள் மிகத் தீவிரம்…!!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, தூத்துக்குடி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யும் என்றும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |