கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவலின் காரணமாக 7 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் தமிழகம்- ஆந்திரா இடையே பொது போக்குவரத்திற்கு மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளது.
அக்டோபர் 31ம் தேதி முதல் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கும், நவம்பர் 16 முதல் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்ககும் இபாஸ் இல்லாமல்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனைத்தொடர்ந்து தமிழகம்- ஆந்திரா மாநிலங்களுக்கும் இடையே மீண்டும் தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்தை தொடங்க வரும் 25ம் தேதி முதல் அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. அந்த அறிவிப்பில், இருமாநிலங்களுக்கிடையே பயணிக்க இ- பாஸ் தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.