ஆன்லைன் மூலமாக இருப்பிட சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் முறையை தெரிந்து கொள்ளலாம்.
இருப்பிட சான்றிதழ் என்பது நாம் எங்கு வசிக்கிறோம் என்பதை காட்டும் ஒரு அடையாளமாகும். ஒருவர் இருப்பிட சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது எங்கு வசித்து வருகிறாரோ அந்தப் பகுதியிலுள்ள வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த வட்டாட்சியர் தகுந்த விசாரணையின் மூலமாக மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்த பின்னரே மனுதாரருக்கு மேற்படி சான்றிதழை வழங்குவார். குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு இருப்பிடச்சான்றிதழ் தேவைபடாது. ஆனால் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளில் தேவையான சான்றிதழ் வாங்கும்போது இருப்பிட சான்றிதழ் சேர்த்து வாங்குகின்றனர். குடும்ப அட்டை இல்லாதவர்கள் வேண்டுமானால் தனியாக இருப்பிட சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்:
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
- ஆதார் அட்டை/குடும்ப அட்டை
- பிறப்பு சான்றிதழ்
விண்ணப்பிக்கும் முறை:
முதலில் https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இதில் சைன் அப் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இதில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்யவும். அதன் பின்னர் உங்களது செல்போனுக்கு ஒரு ஓடிபி நம்பர் வரும். அவற்றை அதில் உள்ளிடுவதன் மூலம் நீங்கள் பதிவு செய்து கொள்ள முடியும்.
பின்னர் நீங்கள் முன்னதாக பதிவு செய்திருக்கும் user name மற்றும் password கொடுத்து லாகின் செய்யவும். அதையடுத்து services revenue department என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும் . இதில் என்னென்ன சேவைகள் இருக்கிறது என்பதை காண்பிக்கும். அதில் இருப்பிட சான்றிதழ் சேவையை தேர்ந்தெடுத்து புரோசீட் ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
பின்னர் Register CAN என்று கொடுக்கவும். அப்போது உங்கள் செல்போனுக்கு CAN நம்பர் வரும். இதை இணையத்தில் கேட்கப்படும் இடத்தில் உள்ளிடவும். அதைத்தொடர்ந்து முன்னர் நீங்கள் நிரப்பிய விவரங்கள் காண்பிக்கப்படும். அவற்றை ஒரு முறை சரிபார்த்து பின்னர் சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து நீங்கள் ஏற்கனவே ஸ்கேன் செய்து வைத்திருக்கும் உங்களுடைய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
பின்னர் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் self-declaration படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் மீண்டும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் வேண்டும். பின்னர் சான்றிதழுக்கான 60 ரூபாய் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். இதையடுத்து உரிய அலுவலகத்திற்கு உங்கள் விண்ணப்பம் அனுப்பப்படும். அவர்கள் அதனை சரிபார்த்து சான்று கிடைத்ததும் உங்களது செல்போனுக்கு செய்தி வரும். பின்னர் இதே இணையதளத்தில் லாகின் செய்வதன் மூலம் நீங்கள் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.