Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் மூலம் இருப்பிடச் சான்றிதழ்… வீட்டிலிருந்தே பெறலாம்… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

இருப்பிடச் சான்றிதழ் வாங்க இனிமேல் எங்கேயும் போய் அலைய வேண்டாம் வீட்டில் இருந்தபடியே வாங்கிக் கொள்ளலாம்.

குடும்ப அட்டையே ஒரு இருப்பிடச் சான்றிதழ் தான். அவ்வாறு குடும்ப அட்டை இல்லாதவர்கள் இருப்பிடச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

விண்ணப்பதாரரின் புகைப்படம்
ஆதார் அட்டை, குடும்ப அட்டை.
பிறப்பு சான்றிதழ்.

விண்ணப்பிக்கும் முறை:

முதலில் www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் சைன் அப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் இருக்கும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பின்னர், உங்களின் மொபைலுக்கு ஒரு ஓடிபி எண் வரும். அதனை அதில் உள்ளிட்டு நீங்கள் பதிவுசெய்து கொள்ளலாம். அதன் பிறகு நீங்கள் பதிவு செய்த user name மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாக் இன் செய்து கொள்ளவும். பிறகு service revenue department என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.

அதில் உள்ள சேவைகளில் இருப்பிடச் சான்றிதழ்-ஐ தேர்வு செய்து proceed ஆப்சனை கிளிக் செய்து Register CAN என்று தேர்வு செய்யவும். அப்போது உங்களின் மொபைலுக்கு CAN எண் கிடைக்கும். அதனை இணையதளத்தில் பதிவு செய்யவும். அதன் பிறகு நீங்கள் நிரப்பிய விவரங்கள் அனைத்தும் திரையில் தோன்றும், அதனை சரி பார்த்துக்கொள்ளவும். அதன் பிறகு நீங்கள் முன்னதாக ஸ்கேன் செய்து வைத்துள்ள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு அதில் கொடுக்கப்பட்டிருக்கும் self declaration படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த பிறகு மீண்டும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் வேண்டும். அதன்பிறகு சான்றிதழுக்கான 60 ரூபாய் கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். இதனையடுத்து உரிய அலுவலகத்திற்கு உங்களின் விண்ணப்பம் அனுப்பப்பட்டு, அவர்கள் அதனை சரிபார்த்து சான்றிதழ் கிடைத்தவுடன் உங்களுக்கு மொபைலுக்கு குறுஞ்செய்தி வரும். அதன் பிறகு இதே இணையதளத்தில் லாகின் செய்து நீங்கள் உங்கள் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

Categories

Tech |