Categories
மாநில செய்திகள்

எங்கே செல்கிறது தமிழகம்?… சேலத்தில் நடந்த கொடூரம்…!!!

சேலம் மாவட்டத்தில் கூலித்தொழிலாளியின் 2 மகள்களை 8 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல பயங்கர சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் சேலம் அருகே கூலித் தொழிலாளி ஒருவர் தனது 15, 12 வயது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்று கயிறு கட்ட மந்திரவாதி ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வந்த மந்திரவாதி 2 சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

தற்போது அதே இரண்டு பெண்களையும் அதே பகுதியை சேர்ந்த மாட்டுத்தீவனம் தொழில் செய்துவரும் ரவீந்திரன் என்பவர் வேலைக்காக அழைத்துச் சென்ற கடந்த 8 மாதங்களாக தொடர் பலாத்காரம் செய்து வந்துள்ளார். மட்டுமன்றி அந்தச் சிறுமிகளுக்கு கரு உண்டானதால், மாத்திரை வாங்கிக் கொடுத்து கருவை கலைத்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |