பாலிவுட் நடிகை சனாகான் சூரத்தை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகை சனாகான் ஈ, சிலம்பாட்டம், பயணம், தம்பிக்கு இந்த ஊரு, ஒரு நடிகையின் கதை ,ஆயிரம் விளக்கு ஆகிய திரைப்படங்களில் நடித்தவர். இவர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதிக அளவில் பிரபலம் அடைந்தார். மேலும் இவர்மெல்வின் லூயிஸ் என்ற நடன இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தார். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் பிரிந்து விட்டனர்.
இதையடுத்து சமீபத்தில் நடிகை சனாகான் திரைத்துறையை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தார். என்னை படைத்தவரின் ஆணைக்கு இணங்க மனித குலத்திற்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகை சனாகான் சூரத்தை சேர்ந்த முப்தி அனாஸ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார் . இவரின் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரது திருமணத்திற்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.