Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாய் புலி இறந்ததால்… சோகமாக சுற்றிய குட்டிபுலிகள்… மீட்ட வனத்துறையினர்…!!

தாய் புலி இறந்த துக்கத்தில் அதை சுற்றி சுற்றி  சோகமாக வந்த குட்டிபுலிகளை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம்(வெளி மண்டலம்) சிங்கார வனச்சரக பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது ஆச்சக்கரை என்ற இடத்தில் பெண்புலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து வனச்சரகர் காந்தன் உள்ளிட்ட வனத்துறையினர் புலி இறந்து கிடந்த இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இரவு நேரம் என்பதால் உடனடியாக புலியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முடியவில்லை.

இந்நிலையில் காலையில் வனத்துறையினர் புலி இறந்து கிடந்த இடத்துக்கு மீண்டும் சென்றுள்ளனர். அப்போது இறந்த புலியின் பக்கத்தில் இரண்டு புலிக்குட்டிகள் சோகத்துடன் சுற்றி வந்துள்ளன. தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தாயின் உடலை சுற்றி சுற்றி வந்துள்ளது. அந்த குட்டிகள் பிறந்து மூன்று வாரங்கள் ஆகியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அந்த குட்டிகளை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர். புலிக்குட்டிகளை எங்கு வைத்து பராமரிப்பது என்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |