Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு…இந்த ரோல் ரெஸிபிய…செய்து கொடுத்து…சூப்பரா அசத்துங்க..!!

 பூரி ஸ்விட் ரோல்ஸ் செய்ய தேவையான பொருள்கள்:

பொரித்த பூரிகள்                      – 6
தேங்காய்த் துருவல்              – 3 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை                 – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள்                       – ஒரு சிட்டிகை
நெய்                                               – 1 டீஸ்பூன்
லவங்கம்                                     – 6
டூட்டி ஃப்ரூட்டி                          – 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் தேங்காயை துருவி எடுத்து கொள்ளவும். பின்பு சர்க்கரையை எடுத்து மிக்சிஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.  அதன் பின்பு அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் நெய்யை ஊற்றி சூடானதும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், தேங்காய்த் துருவலை சேர்த்து நன்கு  குழைய வைக்கவும்.

பின்பு  குலைய வைத்த கலவையை எடுத்து, பொரித்த பூரிகளில் ஊற்றிஅதை ரோலாக சுருட்டி வைத்து, புரியானது பிரிந்துவிடாமல் இருக்க, லவங்க குச்சியால்  குத்தி வைத்து, அதன் மேல்  டூட்டி ஃப்ரூட்டிகளை  தூவியபின்  பரிமாறினால் சுவையான பூரி ஸ்விட் ரோல் ரெடி.

Categories

Tech |