Categories
சினிமா தமிழ் சினிமா

யாரும் நம்ப வேண்டாம்… ரஜினி குறித்து பரவும் வதந்தி… விளக்கமளித்த பி.ஆர்.ஓ

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அவரது  பி.ஆர்.ஓ விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘அண்ணாத்த’ திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு அடுத்த மாதம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ரஜினிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது.

இதனால் ரஜினியின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் ரஜினியின் உடல் நலம் குறித்து அவரது பி.ஆர்.ஓ விளக்கமளித்துள்ளார். அவர் ரஜினிகாந்தின்  உடல் நலம் குறித்து பரவும் தகவலை யாரும் நம்ப வேண்டாம் , ரஜினி  நலமுடன் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |