Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கேரட், சீஸில்…புதுவகையில்…மிருதுவான…ஊத்தப்பம் ரெசிபி..!!

கேரட் – சீஸ் ஊத்தப்பம் செய்ய தேவையான பொருட்கள் :

அரைப்பதற்கு :

புழுங்கல் அரிசி             – 4 கப்
முழு உளுந்து                 – 1 கப்
துவரம் பருப்பு                 – கால் கப்
வெந்தயம்                         – 4 டீஸ்பூன்
உப்பு                                     – தேவைக்கேற்ப

ஊத்தப்பத்துக்கு :

வெங்காயம்                        – 2
பச்சை மிளகாய்                – 2
இஞ்சி                                     – சிறிய துண்டு
பூண்டு                                    – 6 பல்
கொத்தமல்லி தழை       – சிறிதளவு
துருவிய சீஸ்                     – 1 கப்
எண்ணெய்                           – தேவைக்கு
கேரட்                                      – 3

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் புழுங்கல் அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயத்தைபோட்டு  4 மணி நேரம் ஊற வைத்து, எடுத்து மிக்சிஜாரில் போட்டு தோசை மாவு பதத்துக்கு முதல் நாளே அரைத்து, தேவையான உப்பு சேர்த்து, நன்கு புளிக்க விடவும்.

பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி,சீஸ், பூண்டை பொடியாக நறுக்கியதும், கேரட், இஞ்சியையும்  துருவி எடுத்து கொள்ளவும்.

அதன் பின்பு  தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், புளிக்க வைத்த மாவில்,  குழிக் கரண்டியால் தோசை கல்லில் மாவை ஊற்றி பெரிய  தோசை வார்த்து கொள்ளவும்.

அதனடுத்து அதில்  பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, கேரட் தூவியபின்,  சீஸை தூவி தோசை சுற்றி  எண்ணெயை விட்டு, மூடி வைத்து, வேக வைத்து பரிமாறினால்  சுவையான கேரட் – சீஸ் ஊத்தப்பம் தயார்.

Categories

Tech |