பெண் ஒருவர் தான் வேலை செய்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டனில் verwood பகுதியை சேர்ந்தவர் Emma Rhodes(37). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வருவாய் தணிக்கையாளராக வேலை செய்து வந்துள்ளார். இதனால் நிதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் இவர் தான் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சாதாரண வாழ்கை வாழ்ந்து வந்த Emma திடீரென்று கார்,பங்களா என பெரிய கோடீஸ்வரியாக வாழ்ந்து வந்துள்ளார். மேலும் சில இடங்களுக்கு சுற்றுலா செல்ல தொடங்கியதோடு, அதிகளவிலான பணத்தையும் முதலீடு செய்து வந்துள்ளார். இது குறித்து சிலர் Emma விடம் கேட்டபோது தனக்கு போனஸ் பணம் கொடுத்தார்கள் என்று பொய் சொல்லியுள்ளார்.
இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் Emma ஒழுங்கீனமாக நடந்துவிட்டதாக நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. மேலும் அவர் செய்த மோசடிகள் எல்லாம் அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அவர் 437,431.68 பவுண்டுகள் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் Emma வை கைது செய்துள்ளனர். இந்நிலையில் அவர் மீது பதியப்பட்ட மோசடி வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வாழங்கப்பட்டுள்ளது.