கம்பு தோசை செய்ய தேவையான பொருள்கள்:
கம்பு – 100 கிராம்
இட்லி அரிசி – 200 கிராம்
பச்சரிசி – 50 கிராம்
உளுத்தம் பருப்பு – 50 கிராம்
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் பாத்திரத்தில் அரிசி, உளுந்து, கம்பு மூன்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி எட்டு மணி நேரம் நன்கு ஊற வைத்து எடுத்து, மிக்சிஜாரில் போட்டு மாவாக அரைத்து 5 மணி நேரம் நன்கு புளிக்க வைக்கவும்.
பிறகு, புளிக்க வைத்த மாவை எடுத்து,அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கலக்கி கொள்ளவும். பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவில் ஒரு கரண்டி அளவு எடுத்து மெல்லிய தோசையாகச் சுட்டு எடுத்து பரிமாறினால் சுவையான கம்பு தோசை ரெடி.