Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (23-11-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

23-11-2020, கார்த்திகை 08 , திங்கட்கிழமை, நவமி திதி இரவு 12.32 வரை பின்பு வளர்பிறை தசமி.

சதயம் நட்சத்திரம் பகல் 01.04 வரை பின்பு பூரட்டாதி.

சித்தயோகம் பகல் 01.04 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

தனிய நாள்.

வாஸ்து நாள்.

பகல் 11.09 மணிக்கு மேல் 11-45 மணிக்குள் புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00,

எம கண்டம்- 10.30 – 12.00,

குளிகன்- மதியம் 01.30-03.00,

சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

இன்றைய ராசிப்பலன் –  23.11.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு சுக செய்திகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்த பிரச்சனை விலகும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு பொருளாதாரநிலை சீராக இருக்கும். வீட்டில் ஒற்றுமையான சூழ்நிலை இருக்கும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். வருமானம் பெருகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாத பிரச்சனை இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் இருக்கும். வியாபாரத்தில் மந்தநிலை நீங்கும் முன்னேற்றம் உருவாகும். நண்பர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். கடின உழைப்பு இருந்தால் வெற்றி காண்பீர்கள்.

கடகம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் வேண்டும். தேவை இல்லாதவர்களிடம் வீண் பேச்சை குறைக்கவும்.எந்த செயல் செய்தாலும் சுறுசுறுப்பில்லாமல் செய்வீர்கள். மருத்துவச் செலவு கூடும்.முகம் தெரியாதவர்களிடம் பேசாமல் இருப்பது உத்தமம். வெளி பயணங்களை தவிர்க்க வேண்டும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவுகள் இருக்கும். குழந்தைகளின் ஆதரவு கிடைக்கும். அத்தியாவசிய தேவைகள் நிறைவேறும். தொழிலில் புதிய பொறுப்புகள் வரும்.உத்தியோகத்தில் வெளிவட்டாரத் தொடர்பு மூலம் அனுகூலம் உண்டாகும். சேமிப்புகள் உயரும்.

கன்னி

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் வெளியூர் பயணம் செல்லக் கூடும். சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். குழந்தைகள் தேவைகள் அறிந்து நடப்பார்கள்.

துலாம்

உங்களின் ராசிக்கு உறவினர்களுடன் கருத்துவேறுபாடு இருக்கும். தொழிலில் தேவையில்லாத இடமாற்றத்தால் மன உளைச்சல் இருக்கும். எதிர்பாராத உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய உத்திகளை கையாளுவீர்கள். பணக்கஷ்டம் நீங்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் வீண் பிரச்சனை உண்டாகும். உத்தியோக ரீதியில் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக அமையும்.நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கடன் தொல்லை தீரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சி இருக்கும். அரசு ரீதியில் உதவிகள் உண்டாகும். தொழில் செய்பவர்கள் மேலதிகாரிகளிடம் சுமுக உறவு ஏற்படும். பணவரவு கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மகரம்

உங்களின் ராசிக்கு எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும் அதுவே நல்லது. வாகனங்களால் வீண் செலவு உண்டாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் கவனமாக இருக்க வேண்டும். உற்றார் உறவினர் மூலம் உதவிகள் உண்டாகும். தொழிலில் உடனிருப்பவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் திறமைகள் மேலதிகாரிகளால் கிடைக்கும். தொழிலில் புதிய நாவல் அறிமுகம் உண்டாகும்.வீட்டில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு அகலும். சுபகாரியங்களில் அனுகூல பலன் உண்டாகும். பழைய கடன்கள் வசூலாகும்.

மீனம்

உங்களின் தாசிக்கு நினைத்த காரியம் நடக்க சற்று பொறுமையுடன் இருக்க வேண்டும். தொழிலில் எதிர்பாராத நெருக்கடி இருக்கும். தொழிலில் வேலைப்பளு அதிகமாகும். சுப காரியங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும்.

 

Categories

Tech |