Categories
உலக செய்திகள்

100 வருடங்களுக்கு முன் திருடப்பட்ட…. வாரணாசி அன்னபூரணி சிலை…. இந்தியாவிடம் ஒப்படைத்த கனடா…!!

100 வருடங்களுக்கு முன்னர் திருடப்பட்ட அன்னபூரணி சிலையை தற்போது கனடா இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 100 வருடங்களுக்கு முன்னர் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்ட அன்னபூரணி சிலை கனடா நாட்டிலுள்ள ரெஜினா பல்கலைக்கழகத்தின் கலைக்கூடத்தில் இருந்துள்ளது. இந்த சிலை வாரணாசியில் இருந்து திருடப்பட்ட சிலை என்று  தீபிகா என்ற கனடா நாட்டு கலைஞர் ரெஜினா பல்கலைக்கழகத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார. இந்திய தெய்வமான இந்த அன்னபூரணியின் சிலை தான் என்பதை இந்தியா மற்றும் தெற்காசிய கலைகளின் கண்காணிப்பாளர் டாக்டர் தாமஸ் சேஸ் அடையாளம் காட்டியுள்ளார்.

இதையடுத்து அன்னபூரணி சிலையை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கு கனடா நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள இந்திய துணை தூதரகமும், கனடா கலாசார துறையும் உதவ முன்வந்துள்ளதையடுத்து, டிசம்பர் மாதம் நடந்த காணொளிக் காட்சியில் ரெஜினா பல்கலை கழகத்தின் தலைவரும் துணை வேந்தருமான டாக்டர் தாமஸ் அன்னபூரணி சிலையை கனட இந்திய தூதர் அஜய் பிசாரியாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து பிசாரியா கூறுகையில், “அன்னபூரணியின் இந்த தனித்துவமான சிலை இந்தியாவுக்கு மீண்டும் செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது போன்ற கலாச்சார பொக்கிஷங்களை தானாக முன்வந்து திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கை இந்தியா மற்றும் கனடா இருதரப்பு நாடுகளின் உறவின் ஆழத்தை காட்டுகிறது” என்று கூறியுள்ளார். மேலும் இந்த அன்னபூரணி சிலையானது விரைவில் இந்தியாவுக்கு வந்து சேரும். அதன் பின்னர் அந்த சிலை ஏற்கனவே இருந்துள்ள கோவிலில் வைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |