கடல் உணவான இறால் மீன் எப்படி வேட்டையாடப்படுகிறது என்று காணொளி காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.
நாம் சிக்கன் மற்றும் மட்டன் போன்ற கறிகளை உண்ணுவது போல கடல் உணவுகளையும் விரும்பி உண்பவர்கள் பலர் இருக்கின்றனர். பொதுவாக மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில் தான் பல ஆரோக்யங்கள் அடங்கியுள்ளது. முக்கியமாக அவை இதயத்திற்கு மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. மீனோடு மட்டும் நின்று விடவில்லை, மீனை போல் இன்னும் பல கடல் உணவுகளினால் ஏற்படும் உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளது. அந்த வகையில் இறாலும் அடங்கும்.
இறால் மீன்களை முன்புள்ள மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிடாவிட்டாலும் இப்போது அதற்கான மவுசே தனிதான். ஒருமுறை ருசித்து பார்த்தவர்கள் மறுமுறை அதை கண்டிப்பாக சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள்.
இதில் வெறும் ருசி மட்டும்தானா என்றால் அதுதான் இல்லை. நமக்கு தெரியாத பல உடல்நல நன்மைகள் அடங்கியுள்ளன. நம் விரல் அளவுக்கு கூட இல்லாத அந்த சிறிய உயிரினத்தில் கண்பார்வை, உடல் எடை குறைப்பு, புற்றுநோய், மூளை மற்றும் எலும்பு ஆரோக்கியம், முடி உதிர்வு, வயதான தோற்றத்தை நீக்கும் குணங்கள் என பல பயன்கள் இருக்கின்றது. இந்த இறால் மீன்கள் எப்படி பிடிக்கப்படுகின்றன என்பதையும், அது எவ்வாறு பாதுகாப்பான முறையில் பேக்கிங்க் செய்யப்படுகிறது என்பதையும் இந்த காணொளியில் காணலாம்.