ஒடிசாவை கடந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய பானி புயலுக்கு வங்காளி படமெடுத்து ஆடும் பாம்பு என்று அர்த்தம்.
கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது புயலாக மாறினால் அதற்கு பெயர் வைப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் உருவாகி நேற்று ஒடிசாவை தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்திய புயலுக்கு பானி என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இந்த பெயரை இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம் சூட்டியது. பானி என்றால் வங்காளி மொழியில் படமெடுத்து ஆடும் பாம்பு என்று அர்த்தமாம். இந்த பெயருக்கு பொருந்தும் வகையில் பானி புயல் ஒடிசாவை நிலையில் குலைய செய்து பெறும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.