கும்பம் ராசி அன்பர்களே…! வீண் வம்புக்கு செல்லாமல் இருப்பது நல்லது.
சண்டை போடும் இடத்தில் தயவு செய்து நீங்கள் நிற்க வேண்டாம். எந்த ஒரு பஞ்சாயத்துகளிலும் கலந்துகொண்டு அறிவுரைகளை சொல்ல வேண்டாம். பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். தேவையில்லாத பொருட்களில் முதலீடு செய்வீர்கள். அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கவும். கஷ்டங்கள் ஓரளவு இருக்கும். கஷ்டங்கள் நீங்க உங்களுடைய கட்டுப்பாடு ஓரளவு வேண்டும். எதிர்ப்புகள் மறையும். நண்பர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். இழுபறியாக இருந்த விஷயம் நல்லதாக நடந்து முடியும். பிரச்சனை தீரும் நாளாக இருக்கும். வாகனம் வீடு விஷயங்களில் செலவு உண்டாகும்.
காதலில் உள்ளவர்களுக்கு நிதானமான போக்கு வெளிப்படும். மாணவக் கண்மணிகள் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். சக மாணவர்களிடம் வீண்வம்பு வேண்டாம்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை ஆனந்தமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்ட நிறம் பழுப்பு மட்டும் பிரவுன் நிறம்.