Categories
சினிமா தமிழ் சினிமா

மன்னிப்பு கேட்கணும் இல்லன்னா ஒரு கோடி நஷ்ட ஈடு கொடுக்கணும்… பிக்பாஸ் பாலாஜி மீது பாய்ந்த வழக்கு…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜி மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக ஜோ மைக்கேல் அறிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன்  தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்  4-வது சீசனில் பங்கேற்றுள்ள பாலாஜி முருகதாஸ் என்ற போட்டியாளரின் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக அழகிப்போட்டி ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப்போட்டி ஏற்பாட்டாளரையும் அவர் கம்பெனியில் கலந்துகொண்ட பெண்களையும் பற்றி பாலாஜி தவறாக சித்தரித்துள்ளார்.

தற்போது அந்த அழகிப்போட்டியின்  ஏற்பாட்டாளரான ஜோ மைக்கேல் பாலாஜி மீது மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.மேலும்  அவர் அறிவித்த புகாரில், பாலாஜி மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்திடம்  ஒரு கோடி கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |