தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டு போட வந்த நடிகர் சிவகார்த்திகேயன் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார் .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்தது. தற்போது இவர் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘டாக்டர்’ திரைப்படம் தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படத்தில் அனிருத் இசையமைத்த ‘செல்லம்மா’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது .
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்த சிவகார்த்திகேயனிடம் பத்திரிக்கையாளர்கள் உரையாடினர். அதில் அவர் நடித்துள்ள ‘டாக்டர்’ திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி மட்டும் மீதம் இருப்பதாக கூறியுள்ளார். இந்த திரைப்படத்தில் சண்டை காட்சிகள் லாக்டவுனுக்கு முன்னரே படமாக்கிவிட்டதாக தெரிவித்தார். மேலும் அவர் படப்பிடிப்புகள் அரசு அறிவித்தபடி பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.