உடலில் உள்ள வியர்வை வெளியேறுவதால் ஏற்படும் நன்மைகளை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
இனி தினமும் கொஞ்சம் நேரம் உடற்பயிற்சி செய்ங்கவியர்வை வெளியேறுவதனால் பல்வேறு நன்மைகள் நடைபெறும். அதிலும் உடற்பயிற்சி , நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாக்க வேண்டும். அப்படி செய்யும் போது நன்றாக வியர்வை வெளியேறும்.
நச்சுகளை வெளியேற்றும் வியர்வை
வியர்வை வெளியேறுவதின் மூலம் உடலில் தங்கியுள்ள நச்சுகள் வெளியேறும். வியர்வை வெளியேறுவதால் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். வியர்வை மூலம் உடலில் தங்கியுள்ள நச்சுகள் வெளியேற்றப்படுவதால், உடல் சுத்தமாவதோடு, சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளும் வெளியேறி சருமமும் பொலிவோடு இருக்கும். முகம் பளிச்சென மாறும்.
சிறுநீரக செயல்பாடு அதிகரிக்கும்
வியர்வை அதிகம் வெளியேறினால் சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கலாம். எப்படியெனில் வியர்வையின் மூலம் உடலில் உள்ள உப்புக்கள் வெளியேறி, எலும்புகளில் கால்சியத்தை தக்க வைக்கும். இதன் மூலம் சிறுநீரகங்களில் உப்பு மற்றும் கால்சியம் படிந்து கற்களாக உருவாவதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி வியர்வை அதிகம் வெளியேறினால், தண்ணீர் அதிகம் குடிக்க தோன்றும். இப்படி தண்ணீர் அதிகம் குடிப்பதால், சிறுநீரகங்களின் செயல்பாடும் மேம்படும்.
காயங்களை குணமாக்கும் வியர்வை