Categories
கிரிக்கெட் விளையாட்டு

“டெல்லி அணியை விட்டு விலகுவது கடினம் தான்” உருகிய ரபாடா!!

டெல்லி அணியை விட்டு விலகுவது மிகவும் கடினமானதாக இருக்கிறதென டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார். 

தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா முன்னணி பந்து வீச்சாளராக உள்ளார்.இவர் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் இவரின் அபார  பந்து வீச்சால் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த தொடரில்இதுவரையில்  12 போட்டிகளில்  25 விக்கெட்டுகள் வீழ்த்தி அவர் தான் முன்னணியில் உள்ளார். இதற்கான ஊதா நிற ‘பர்பிள்’ தொப்பி அவருக்கு  வழங்கப்பட்டுள்ளது.

Image

இந்த நிலையில் கடந்த 28ம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ரபாடாவுக்கு முதுகு வலி ஏற்பட்டது. இதனால் சென்னைக்கு எதிரான கடந்த போட்டியில் அவர் விளையாடவில்லை. பின்னர்  அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அந்த அறிக்கையை டெல்லி அணி தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்திற்கு அனுப்பியது. இதையடுத்து ராபாடாவை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நாட்டுக்கு திரும்புமாறு அறிவுறுத்தியுள்ளது.

Image

இந்நிலையில் இது பற்றி ரபாடா கூறும் போது, இந்த நிலையில் டெல்லி அணியை விட்டு விலகுவது மிகவும் கடினமானதாக இருக்கிறது. இருந்தாலும் உலக கோப்பை நெருங்கி வருவதால் நாட்டுக்காக சில முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம். டெல்லி அணிக்காக விளையாடியது நல்ல அனுபவம். டெல்லி அணியை விட்டு செல்வது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. ஓய்வறையிலும் களத்திலும் எனக்கு இந்த தொடர் மிக சிறப்பானதாக அமைந்தது. இந்த முறை டெல்லி அணி கோப்பையை கைப்பற்றும் என நம்புகிறேன் என்றார்”. ஏற்கனேவே தென் ஆப்பிரிக்க அணியின் லுங்கி நிகிடி, ஸ்டெய்ன், அன்ரிச் நோர்ஜே ஆகியோர் காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |