Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பளிச்…. பளிச் பற்களுக்கு…. 5 நாளுக்கு BRUSH தூக்கி போடுங்க…. இந்த தோலை வச்சு தேய்ங்க….!!

இயல்பாகவே நமக்கு நற்குணங்கள் ஏராளம் இருந்தாலும், அதனை மற்றவர்களிடம் காண்பிப்பது நமது வெளிப்புறத் தோற்றம் தான். வெளிப்புற தோற்றத்தின்  அடிப்படையில் தான் முதலில்  மக்கள் நம்மை கணிக்கிறார்கள். அதை தாண்டி பழகும் போது மட்டுமே நம்முடைய குணம் அவர்கள் கண்ணுக்கு தெரியும். பொதுவாக வெளிப்புற தோற்றத்தில் மற்றவர்களை கவர்வதில் முக்கிய பங்கு வகிப்பது நம்முடைய சிரிப்பு தான். நமது சிரிப்பு அழகாக இருக்கும் பட்சத்தில்,

எளிதாக மற்றவர்களை கவர்ந்து அவர்களிடம் நல்ல நட்புறவுடன் பழகிக் கொள்ள முடியும். ஆனால், பலரோ பற்களில் மஞ்சள் கறை இருப்பதை அவமானமாக கருதிக்கொண்டு சிரிக்காமல் முகத்தை வைத்திருப்பது பிறருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தலாம். இந்நிலையில் பற்களில் உள்ள மஞ்சள் கறையை எளிய முறையில் போக்குவது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

பழங்களில் நிறைய சத்துக்கள் இருப்பதைப்போல, அதன் தோலிலும் நிறைய சத்துக்கள் உள்ளன. வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு தோலில் பற்களை வெண்மையாக்கும் சக்தி இருக்கிறது. தினமும் இரண்டு முறை ஏதேனும் ஒன்றில் பற்களை தேய்த்து வரவேண்டும். அதில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் பற்களை வலுவாக்குவதுடன் வெண்மையான தோற்றத்தையும் கொடுக்கும். 

Categories

Tech |