Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“நவம்பர்-26” கட்டாயம்….. இல்லைனா NO லீவு…. NO சம்பளம்….. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துமாறும்,  தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சிறப்பு காலமுறை  ஊதியம், தினக்கூலி ஊழியர்களுக்கான காலமுறை ஊதியம், கொரோனா காலத்தில் வாபஸ் வாங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளார்கள்.

இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் அனைத்து அரசு ஊழியர்களும் பங்கேற்க வேண்டும் என்ற அறைகூவல் விடப்பட்டதாகவும்,  அதற்கு ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், நவம்பர் 26 ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும், கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மீறி  வரவில்லையெனில் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும். 26ஆம் தேதி மருத்துவ விடுப்பை தவிர பிற விடுப்புகள் ஏற்றுக்கொள்ளப்படாது. தற்காலிக பகுதிநேர ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றார்கள் என்றால்,  வேலைவாய்ப்புகள் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |