Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தனிப்பட்ட காரணமா….? முக்கிய பிரபலம் வெட்டி கொலை….. தமிழகத்தில் பரபரப்பு….!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த சமத்துவபுரம் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ். இவர் அகில பாரத இந்து மகாசபா மாநில செயலாளர் ஆவார். இவருக்கு  அரசியல் ரீதியாகவும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல எதிரிகள் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், நாகராஜ் நேற்று பைக்கில் சென்று கொண்டிருந்த போது,

மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து ஓட ஓட வெட்டிக் கொலை  செய்துள்ளனர்.  இதில் பலத்த காயமடைந்த நாகராஜ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலையில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என்றும், தனிப்பட்ட காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Categories

Tech |