Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் சொல்ல மறுக்குறாரு…. உயிர்ப்பலி 4 லட்சம் தாண்டிரும் … பைடன் சொன்ன ஷாக்கிங் நியூஸ் …!!

கொரோனா பரவல் குறித்த முக்கிய தகவல்களை டிராம் நிர்வாகம் அளிக்க மறுப்பதாக பைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் பதவி ஏற்பதற்குள் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டிவிடும் என்று பைடன் கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவல் குறித்த முக்கியமான தகவல்களையும், புதிய தடுப்பூசி எவ்வாறு விநியோகிக்கப்பட வேண்டும் என்பதை பகிர்ந்து கொள்ள ட்ரம்ப் நிர்வாகம் மறுத்து வருகிறது என்று பைடன் குற்றம் சாட்டியுள்ளார். எனவே தனது சொந்த திட்டங்களின் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்போவதாக பைடன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கை பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியதையடுத்து ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற மறு வாக்கு எண்ணிக்கையில் பைடன் வெற்றி பெற்றுள்ளதாகஉள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சுமார் 30 வருடங்களுக்கு பின் ஜார்ஜியா மாகாணத்தை ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |