சந்திர கிரகணத்தின் போது சந்திரனின் மீது மோதிய விண்கல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சந்திர கிரகணத்தின் போது விண்கல் ஒன்று சுமார் 61 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சந்திரனின் மீது மோதியுள்ளது என்றுஸ்பெயின் நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 45 கிலோ எடை கொண்ட இந்த விண்கல் சந்திரனில் 15 மீட்டர் பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள ஸ்பெயின் நாட்டு அறிஞர்கள் இந்த கல் வால் நட்சத்திலிருந்து விழுந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.