Categories
உலக செய்திகள்

பைடன் வெற்றி செல்லாது… நீதிமன்றத்தை நம்பிய ட்ரம்ப்… ஆனால் கிடைத்ததோ பலத்த அடி… நொந்து போன டிரம்ப் தரப்பு …!!

தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி அதிபர் ட்ரம்ப் தொடுத்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில் பென்சில்வேனியாவில் மின்னஞ்சல் மூலம் செலுத்தப்பட்ட வாக்குகள் செல்லாது என்று ட்ரம்ப் கொடுத்த வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி Mttthew Brann இந்த வழக்கில் எந்தவித ஆதாரமும் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்துள்ளார்.

இந்த நடவடிக்கை  பென்சில்வேனியாவில் பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் ஒரு சான்றாகும் என்று கூறப்படுகிறது. மேலும் பைடன் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தலில் தனது தோல்வியை ஏற்க மறுக்கும் டிரம்புக்கு இது ஒரு மிகப்பெரிய தோல்வி ஆகும். தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த ட்ரம்ப் அதை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரத்தையும் வழங்காமல் தொடர்ந்து தேர்தல் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற 270 இடங்களை கைப்பற்ற வேண்டிய நிலையில், பைடன் 306-232 என்ற கணக்கில் ட்ரம்பை தோற்கடிப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |