தமிழகத்தில் அடுத்து புறப்பட போகும் தலைவர் ஸ்டாலினின் போர் படையை எப்படி தடுப்பார் எடுபுடிஜி என உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அவர் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் போலீசாரின் தடையை மீறி இரண்டு நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “காவல் துறைக்கு என்னை ரொம்ப பிடிக்கிறது. குத்தாலத்தில் இன்றும் கைது செய்துள்ளனர்.
ஒரு உதயநிதியை கைது செய்தால் கழகத்தை நோக்கி மக்கள் வருவதை தடுக்கலாம் என எண்ணும் அடிமைகளை நினைத்தால் சிரிப்பு வருகிறது. அடுத்து புறப்படும் தலைவர் ஸ்டாலினின் போர் படையை எப்படி தர்பார் எடுபுடிஜி ” என்று அவர் கூறியுள்ளார்.