தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 26ம் தேதி அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி அனைத்து அரசு ஊழியர்களும் கட்டாயம் பணிக்கு வரவேண்டுமென தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.
அதுமட்டுமன்றி நவம்பர் 26 ஆம் தேதி மருத்துவ விடுப்பை தவிர பிற விடுப்புகள் ஏற்றுக் கொள்ளப்படாது. தற்காலிக பகுதிநேர ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றார் வேலைவாய்ப்புகள் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.