திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் தொடங்கி இருக்கிறது.
திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் கூட்டம் செயற்குழு, பொதுக்குழுவுக்கு அடுத்து நடைபெறும் முக்கியமான ஆலோசனை கூட்டமாக பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் 2018 முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவுக்கு பிறகு அவசரமாக கூடி அப்போதைய நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்தார்கள். அதற்கு பிறகு 2019 இந்தி திணிப்புக்கு எதிராக அமித் ஷா பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய வகையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தநிலை தற்போது சட்டமன்றத் தேர்தல் 2021யை எதிர்கொள்ளும் வகையில் தற்போது இந்த கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் என்பது முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முக்கியமான விவாதப் பொருள் என்ன என்று பார்த்தால் ? கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் திமுக தலைவர் ஸ்டாலின் ஒருமனதாக கொடுக்கக்கூடியதாக இந்த கூட்டத்தில் முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கிறது.
அதிமுக – பாரதிய ஜனதா கூட்டணி உறுதி செய்து தேர்தல் பணியை ஆரம்பித்து விட்டார்கள். திமுகவும் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கி இருந்தது. தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இரண்டாம் கட்ட பிரச்சாரத்தையும் அறிவித்துவிட்டார்கள். எனவே இதுகுறித்து மேலும் விரிவாக பேச வாய்ப்பு இருக்கிறது. தொகுதி பங்கீடு, கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு இடங்களை ஒதுக்கலாம் ? என்பது குறித்தும் ஆலோசனை நடத்த வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு 2 கட்டமாக தமிழ்நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து கொண்டு இருக்கின்றார்கள். திமுக மீது மக்களிடம் எந்த மாதிரியான எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது 27 மூத்த உறுப்பினர்கள் அடங்கிய திமுகவின் உயர்மட்ட குழு கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர் சந்திப்பு அல்லது தீர்மான நகல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.