Categories
மாநில செய்திகள்

உடனே செய்யுங்க… மிக அவசரம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் பயிர்களை பாதுகாத்துக்கொள்ள காப்பீடு செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நிவர் புயலாக உருமாறியுள்ளது. அதனால் தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகே இருக்கின்ற பொது சேவை மையங்களிலோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ, வர்த்தகர் சங்கங்களிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி, காப்பீடு செய்து, நிதி இழப்பீடு களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் உடனடியாக விரைந்து சென்று இந்த காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |