Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் அதிர்ச்சி…. முதல் 15இடத்தில் யாருமே வரல… கலங்கடித்த கலந்தாய்வு …!!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்பில் பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று (நவ. 23) தொடங்கியுள்ளது. இந்தக் கலந்தாய்வில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பில் 4944 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கலந்தாய்வு காலை 8 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, கலந்தாய்வு நடைபெறும் ஜவர்கலால் நேரு விளையாட்டு அரங்குக்கு மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர். இதையடுத்து மாணவர்களுக்கு வருகை பதிவேடு சரிபார்க்கப்பட்டது.

அப்போது, முதல் 10 இடங்களை பிடித்த மாணவர்கள் உள்பட தரவரிசை பட்டியலில் முதல் 15 இடங்களை பிடித்த மாணவர்கள் யாரும் கலந்தாய்வுக்கு வரவில்லை. காலை 9 மணிக்கு கலந்தாய்வுக்காக தரவரிசை பட்டியலில் உள்ள முதல் 50 இடங்களைப் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தது. இதில், 35 மாணவர்கள் பங்கேற்கவில்லை, 16ஆவது இடம் பிடித்த மாணவர் கலந்தாய்வில் பங்கேற்க வந்திருந்தார்.

முதல் முறையாக மருத்துவ படிப்பில் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடம் பெற்ற மாணவர்கள் ஒருவர் கூட கலந்தாய்வில் பங்கேற்காதது கல்வி அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு, இருப்பிடச் சான்றிதழை தவறாக அளித்து மாணவர்கள் சிலர் முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து மாணவர்களின் இருப்பிடச் சான்றிதழ் தீவிரமாக பரிசோதிக்கப்படுகின்றன. சந்தேகப்படும் மாணவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு தனியாக இருப்பிடச் சான்று சரிபார்ப்பு குழுவால் அதற்கான பதிவேடு பராமரிக்கப்படுகிறது.

Categories

Tech |